சந்தாப்புரா அரசு பி.யூ. கல்லூரியில் கன்னட ராஜ்யோத்சவா விழா


சந்தாப்புரா அரசு பி.யூ. கல்லூரியில் கன்னட ராஜ்யோத்சவா விழா
x

சந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூாியில் கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாடப்பட்டது.

ஆனேக்கல்:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் அருகே உள்ள சந்தாப்புராவில் அரசு பி.யூ. கல்லூரி அமைந்துள்ளது. அந்த கல்லூரியில் நேற்று முன்தினம் முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பில் கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாடப்பட்டது. இதில் ஓய்வுபெற்ற பேராசிரியர் நரசிம்ம மூர்த்தி கவுரவிக்கப்பட்டார்.

அதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், கன்னட பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் சன்மானம் வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகரும், இக்கல்லூரியின் முன்னாள் மாணவருமான ரமேஷ் கலந்து கொண்டு பேசினார். அதையடுத்து கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

.......


Next Story