சந்திரயான் -3 விண்கலம்: வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்


சந்திரயான் -3 விண்கலம்: வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்
x
தினத்தந்தி 17 Aug 2023 1:46 PM IST (Updated: 17 Aug 2023 2:06 PM IST)
t-max-icont-min-icon

'சந்திரயான்-3' விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்றுவட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், 'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக வெற்றிகரமாக அனுப்பியது.

'சந்திரயான்-3' விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்றுவட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதனை பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், 'சந்திரயான்-3' 100 கிலோ மீட்டர் தொலைவிலான நிலவு அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் திட்டமிட்டபடி 23-ந் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் 'சந்திரயான்-3' விண்கலம் தரையிறங்க இருக்கிறது.

இந்த நிலையில், 'சந்திரயான்-3' விண்கலத்தில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட உந்துவிசை கலன் & லேண்டர் நிலவில் மேற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டரின் உயரம் நாளை மாலை 4 மணிக்கு குறைக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 3 நிலவு சுற்றுப்பாதையில் பயணிப்பதை ஐரோப்பிய விண்வெளி மையம், இஸ்ரோ இணைந்து கண்காணித்து வருகிறது.


Next Story