சிறை தண்டனையை எதிர்த்து தொடர்ந்த சவுக்கு சங்கரின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


சிறை தண்டனையை எதிர்த்து தொடர்ந்த சவுக்கு சங்கரின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 10 Nov 2022 11:15 PM GMT (Updated: 10 Nov 2022 11:15 PM GMT)

சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி உத்தரவிட்டது.

புதுடெல்லி,

நீதித்துறையை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக, தானாக முன்வந்து பதிவு செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.


Next Story