உல்லாசத்திற்கு மறுப்பு: கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்றி கொலை செய்த கணவன்...!


உல்லாசத்திற்கு மறுப்பு: கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்றி கொலை செய்த கணவன்...!
x

உல்லாசத்திற்கு மறுத்து கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்றிய கணவனே அவரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் தனது மனைவி ஆஷாவுடன் சேர்ந்து ஏப்ரல் 17ஆம் தேதி மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய சங்கர் தனது மனைவியை உல்லாசத்திற்கு அழைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆஷா மறுப்பு தெரிவிக்கவே சங்கர் அவரை வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆஷா ஓடிச்சென்று கிணற்றில் குதித்து உள்ளார்.

மனைவியைக் காப்பாற்ற சங்கரும் உடனடியாக கிணற்றில் குதித்துள்ளார். ஒருவழியாக அவரைக் காப்பாற்றியிருக்கிறார். இருப்பினும் மீண்டும் மற்றொரு சண்டை வந்துள்ளது. இந்தமுறை ஆத்திரமடைந்த சங்கர், ஆஷாவின் மர்ம உறுப்பு பகுதியை கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ஏப்ரல் 18ஆம் தேதி சங்கரைக் கைது செய்தனர்.

சங்கர் தனது மனைவி ஆஷா மற்றும் குழந்தைகளுடன் ரௌனி பகுதிலிருக்கும் ஜவகர் நகரில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து இதுகுறித்து முதற்கட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். உல்லாசத்திற்கு மறுத்த மனைவியை கணவனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story