சத்தீஷ்கார்: மோதலில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் அமெரிக்க துப்பாக்கி சிக்கியது


சத்தீஷ்கார்: மோதலில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் அமெரிக்க துப்பாக்கி சிக்கியது
x

சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே சமீபத்தில் துப்பாக்கி சண்டை நடந்தது.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தின் போம்ரா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே சமீபத்தில் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில், 4 நக்சலைட்டுகள் பலியானார்கள். சம்பவ இடத்தில் இருந்து 4 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

அவற்றில் ஒன்று, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 'எம்1' ரக துப்பாக்கி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற 3 துப்பாக்கிகளின் குழல் பகுதியை விட அது சிறியது. கையாள்வதற்கு எளிதாக உள்ளது.

துப்பாக்கியில் உள்ள வரிசை எண்ணை வைத்து, அது நக்சலைட்டுகளுக்கு எப்படி கிடைத்தது என்று போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதுபோல், கடந்த 2011 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நக்சலைட்டுகளிடம் இருந்து அமெரிக்க துப்பாக்கியும், 2018-ம் ஆண்டு ஜெர்மனி துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளன.


Next Story