சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான 106 வயது முதியவரின் இறுதிச் சடங்கில் தலைமை தேர்தல் ஆணையர் பங்கேற்பு!


தினத்தந்தி 5 Nov 2022 7:00 PM IST (Updated: 5 Nov 2022 7:02 PM IST)
t-max-icont-min-icon

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி என்ற முதியவர் இன்று காலை காலமானார்.

புதுடெல்லி,

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான கின்னார் மாவட்டத்தில் வசிக்கும் 106 வயதுடைய ஷியாம் சரண் நேகி என்ற முதியவர் தனது சொந்த ஊரில் இன்று காலை காலமானார்.

இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. ஷியாம் சரண் நேகி கடந்த 2-ந்தேதி தனது தபால் வாக்கை செலுத்தினார்.

அவருக்கு தேர்தல் ஆணைய குழுவினர் சிவப்பு கம்பளம் கொண்டு வந்து முழு மரியாதை செலுத்தி வாக்கு பதிவு நடந்தது. அவர் முதலில், வாக்கு மையத்திற்கு சென்று வாக்கு செலுத்துவது என்பதிலேயே ஆர்வமுடன் இருந்துள்ளார்.

எனினும், திடீரென உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில், அவரது வீட்டில் வைத்து வாக்கு செலுத்தி உள்ளார். ஷியாம் சரண் நேகியின் உடல்நலம் தொடர்ந்து மோசமடைந்தது. இந்த நிலையில், அவர் தனது சொந்த ஊரில் இன்று காலை காலமானார்.

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகியின் இறுதி ஊர்வலம் இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான கல்பாவில் நடைபெற இருக்கிறது.

இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், அந்த கிராமத்திற்கு அங்கு ராஜீவ் குமார் ஷியாம் சரண் நேகிக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஷியாம் சரண் நேகி நவம்பர் 2 ஆம் தேதி, அவர் வீட்டில் வைத்து வாக்கு செலுத்தி தனது கடமையை நிறைவேற்றினார். இந்தக் கடமைப் பற்று இளம் வாக்காளர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.


Next Story