முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று சிக்கமகளூரு வருகை
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று சிக்கமகளூரு வருகிறார்.
சிக்கமகளூரு-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று(ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்கமகளூரு மாவட்டத்திற்கு வருகிறார். அவர் சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா ரம்பாபுரி மடத்திற்கு செல்கிறார். அங்கு நடக்கும் ஜெகத்குரு ரேணுகாச்சாரியாரின் பிறந்தநாள் விழாவில் அவர் பங்கேற்கிறார். அதையடுத்து அவர் அங்கு நடக்கும் யுகமானனோத்சவா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். பின்னர் அவர் மதியம் 12.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு துமகூரு மாவட்டத்திற்கு செல்கிறார். துமகூரு மாவட்டத்துக்கும் அவர் ஹெலிகாப்டர் மூலமாகவே செல்கிறார். முதல்-மந்திரி வருகையையொட்டி சிக்கமகளூரு மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story