கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று கோவை பயணம்
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று கோவை பயணம் மேற்கொள்கிறார்.
பெங்களூரு: கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (வியாழக்கிழமை) தமிழ்நாட்டில் உள்ள கோவைக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து காலை 9 மணிக்கு தனி விமானம் மூலம் கோவைக்கு செல்கிறார். 10 மணிக்கு அங்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் காலபட்டியில் நடைபெறும் சுகுனா குழும நிறுவனங்களின் தலைவர் மறைந்த ராமசாமி நாயுடு நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
அந்த விழாவை முடித்து கொண்டு அவர் பகல் 2 மணிக்கு விமானம் மூலம் மீண்டும் பெங்களூரு திரும்புவார்.
Related Tags :
Next Story