முதல்-மந்திரி சித்தராமையா நாளை மைசூரு வருகை
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக நாளை மைசூரு வருகிறார்.
மைசூரு
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக மைசூரு வருகிறார். அவர் நாளை (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மைசூரு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் முதல்-மந்திரி சித்தராமையா சாமுண்டி மலைக்கு செல்கிறார்.
உத்தமல்லி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை அவர் தொடங்கி வைக்கிறார். மேலும் மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொள்கிறார்.
அந்த நிகழ்ச்சிகளை முடித்த பின்னர் ஹெலிகாப்டர் மூலம் முதல்-மந்திரி சித்தராமையா சாம்ராஜ் நகர் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் மாதேஸ்வரன் மலைக்கு முதல்-மந்திரி சித்தராமையா செல்கிறார்.
அங்கு நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இரவு முதல்-மந்திரி சித்தராமையா மாதேஸ்வரன் மலை கோவிலியே தங்குகிறார். சாம்ராஜ் நகர் மாவட்டத்திற்கு முதல்-மந்திரியாக உள்ளவர்கள் சென்றால் பதவி பறிபோகும் என்பது மூடநம்பிக்கை.
ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்தபோதே பலமுறை சாம்ராஜ் நகர் மாவட்டத்திற்கு சித்தராமையா சென்று வந்தார். அதாவது 5 ஆண்டுகளில் 13 முறை சாம்ராஜ் நகர் மாவட்டத்திற்கு சித்தராமையா சென்றுள்ளார். ஆனால் சித்தராமையா பதவி பறிபோகவில்லை.
2- வது முறையாக முதல்-மந்திரியாக அவர் பதவியேற்றுள்ளார். முதல்-மந்திரி சித்தராமையா மூட நம்பிக்கையை நம்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.