சிக்கமகளூருவில் ஒன்னமன் அருவி பகுதியில் மண் அரிப்பு


சிக்கமகளூருவில் ஒன்னமன் அருவி பகுதியில் மண் அரிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2022 12:30 AM IST (Updated: 20 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் உள்ள ஒன்னமன் அருவி பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டதை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு அருகே சந்திரதிரிகோண மலைப்பகுதியில் புகழ்பெற்ற ஒன்னமன் அருவி உள்ளது. இந்த அருவிக்கு முல்லையன்கிரி, பாபாபுடன் கிரி மலைகளுக்கு சுற்றுலா வருபவர்களும் வந்து செல்வார்கள். மேலும் ஆண்டுதோறும் தத்தா ஜெயந்தியை முன்னிட்டு மாலை அணிந்து வரும் பக்தர்கள், ஒன்னமன் அருவியில் குளித்துவிட்டு தத்தா குகைக்கோவிலுக்கு நடந்து சென்று வழிபடுவார்கள்.

ஒன்னமன் அருவியில் இருந்து குழாய்கள் மூலம் சிக்கமகளூருவுக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு ராமனஹள்ளி பகுதியில் சுத்திகரித்து நகருக்கு குடிதண்ணீர் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒன்னமன் அருவியின் தடுப்பு சுவர்கள் இருக்கும் பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதையறிந்த சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story