குழந்தைகளுக்கு மத அடையாளத்துடன் கல்வியை போதிக்கவேண்டும்
குழந்தைகளுக்கு மத அடையாத்துடன் கல்வியை போதிக்கவேண்டும் பா.ஜனதா பிரமுகர் சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
ஆனேக்கல்:
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா பா.ஜனதா பிரமுகர் ஹூல்லஹள்ளி சீனிவாஸ் தலைமையில் சர்ஜாப்புரா யமரே கிராம பஞ்சாயத்தில் காடா அக்ரஹாரா கிராமத்தில் ''சாத்'' பூஜை நடந்தது. இதில் அவர் பேசியதாவது:-
இந்து மதம் என்பது இந்தியர்களின் அடையாளம். கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை இந்துகள் பல்வேறு தெய்வங்களை வழிப்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் வழிமுறைகளில் இறைவனுக்கு பூஜை ெசய்கின்றனர். அதன்படி பீகாரில் சாத் பூஜை மிகவும் விமரிசையானது. இது தீபாவளி முடிந்த பின்னர் சூரியனை கடவுளாக வணக்கும் பூஜை. கர்நாடகத்தில் வசிக்கும் பீகார் மக்களும் சாத் பூஜையை சிறப்பாக கொண்டாடினர். அனைவரும் மத அடையாளத்தை மறந்துவிடகூடாது. எனவே, குழந்தைகளுக்கு மத அடையாளத்துடன் கல்வியை போதிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story