குடும்ப பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த போலி ஜோதிடர் கைது


குடும்ப பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த போலி ஜோதிடர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2022 7:00 PM GMT (Updated: 9 Oct 2022 7:00 PM GMT)

குடும்ப பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த போலி ஜோதிடர் கைது செய்யப்பட்டார்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு டவுன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் 'முகநூல் மூலம் ஜோதிடர் ஒருவர் எனக்கு பழக்கமானார். அவரிடம் எனது குடும்ப பிரச்சினையை கூறினேன். உடனே அவர் தீர்த்து வைப்பதாக கூறி, என்னிடம் பணம் வாங்கினார்.

பின்னர் குடும்பத்தில் உள்ள குறைகளை போக்க சிறப்பு பூஜை செய்வதாக கூறி ரூ.1.16 லட்சம் வாங்கினார். இத்துடன் முடிந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் அவர் மீண்டும் பணம் கேட்டார். இதில் சந்தேகம் அடைந்த நான், அவரிடம் கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர் பணம் கொடுத்தால் குடும்ப பிரச்சினை தீரும், இல்லையென்றால் கூடுதல் பிரச்சினை மீண்டும் வரும்படி மந்திரம் செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார்.

எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த புகாரை ஏற்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பெங்களூரு சகனஹள்ளி பகுதியை சேர்ந்த கணேஷ்(வயது 35) என்ற ஜோதிடரை போலீசார் கைது செய்தனர். அவர் தான் அந்த பெண்ணை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.82 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போன், 2 ஏ.டி.எம் கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story