காபி தொழிற்சாலை உரிமையாளருக்கு 6 மாதம் சிறை


காபி தொழிற்சாலை உரிமையாளருக்கு 6 மாதம் சிறை
x

காபி,டீ துளில் கலப்படம் செய்த விவகாரம் தொடர்பாக காபி தொழிற்சாலை உரிமையாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கீழ்கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

பெங்களூரு:-

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவை சேர்ந்தவர் சையது அகமது. இவர் காபி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சையது அகமதுவின் காபி தொழிற்சாலையில் விற்பனை செய்யப்படும் காபி, டீ தூள்களின் தரத்தை ஆய்வு செய்தனர். அப்போது டீ, காபி தூள்களில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரியிடம், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புகார் அளித்தனர்.

இதையடுத்து சையதுவிடம் விசாரணை நடத்திய உணவு பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஒருவர், சக்லேஷ்புரா ஜே.எம்.சி. கோர்ட்டில் சையது மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சையதுவுக்கு 6 மாதம் சிறை தண்டனை அளித்து கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதனை எதிர்த்து சையது கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான இறுதி விசாரணையின் போது சையதுவின் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, கீழ் கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து சையதுவுக்கு 6 மாதம் சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டு உள்ளது.


Next Story