டி.சி. கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் முஸ்லிம் மாணவிக்கு 'டி.சி.' வழங்கிய கல்லூரி நிர்வாகம்


டி.சி. கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில்  முஸ்லிம் மாணவிக்கு டி.சி. வழங்கிய கல்லூரி நிர்வாகம்
x

டி.சி. கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் டி.சி. வழங்கியது. மேலும், 2 மாணவிகள் தடையில்லா சான்றிதழை பெற்றனர்.

மங்களூரு: டி.சி. கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் டி.சி. வழங்கியது. மேலும், 2 மாணவிகள் தடையில்லா சான்றிதழை பெற்றனர்.

ஹிஜாப் விவகாரம்

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் கடந்த பிப்ரவரி மாதம் விசுவரூபம் எடுத்தது. இதனால் கல்லூரிகள் முன்பு போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது முஸ்லிம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிய அனுமதிக்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்து, ஹிஜாப் தொடர்பாக கர்நாடக அரசு அறிவித்தது செல்லும் என கூறி உத்தரவிட்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

மேலும், ஹிஜாப் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, கர்நாடகத்தில் ஹலால், இந்து கோவில்களில் முஸ்லிம் வியாபாரிகள் கடை அமைக்க எதிர்ப்பு போன்ற பல பிரச்சினைகள் எழுந்தன. இதனால் கர்நாடகம் முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மங்களூரு பல்கலைக்கழக கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தியது.

இடைநீக்கம்

மேலும், ஹிஜாப் குறித்த கர்நாடக அரசின் உத்தரவை கூறி ஹிஜாப்பை கழற்றுமாறு அறிவுறுத்தியது. ஆனால் முஸ்லிம் மாணவிகள் வகுப்புகளை புறக்கணிப்பு செய்துவிட்டு, வீடுகளுக்கு சென்றனர். இதற்கிடையே கல்லூரி முன்பு போராட்டம் நடத்தியதாக 40-க்கும் மேற்பட்ட மாணவிகளை கல்லூரி நிர்வாகம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்து இருந்தது.

இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் சிலர் மன்னிப்பு கடித்தத்தை கொடுத்துவிட்டு, ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்புக்கு வருவதாக கூறினர். அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முஸ்லிம் மாணவிகள் 5 பேர், ஹிஜாப் அணிய அனுமதிக்காததால், தங்கள் மாற்று சான்றிதழை (டி.சி.) வழங்க கோரி விண்ணப்பித்து இருந்தனர்.

மன்னிப்பு கடிதம்

இந்த நிலையில் மாற்று சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த முஸ்லிம் மாணவிகளில் ஒரு மாணவி கல்லூரியில் இருந்து தனது மாற்று சான்றிதழை பெற்று கொண்டார். மேலும், 2 முஸ்லிம் மாணவிகள் வேறு கல்லூரியில் சேருவதற்காக தடையில்லா சான்றிதழை பெற்றனர்.

அதேசமயம் ஒரு முஸ்லிம் மாணவி மட்டும், ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்புக்குள் வர அனுமதிக்க கோரி மன்னிப்பு கடிதத்தையும் கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையே இந்த கல்லூரியை சேர்ந்த மேலும், 15 மாணவிகள் வகுப்புகளுக்கு வராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story