தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
உடுபப்யிலி் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மங்களூரு:
உடுப்பி அருகே இரியடுக்கா போலீஸ் எல்லைக்குட்பட்ட பெரடூர் கிராமத்தை சேர்ந்தவர் திருப்தி (வயது 17). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.யூ.சி. படித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தேர்வில் திருப்தி குறைவான மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கிடையே வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது திருப்தி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் இரியடுக்கா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், திருப்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து இரியடுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.