குளத்தில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை


குளத்தில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்காவில் குளத்தில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சிக்கமகளூரு:

சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகரா அருகே உள்ள ஹெக்கெரே கிராமத்தை சேர்ந்தவர் ரம்யா (வயது 17). இவர் அந்தப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற ரம்யா, வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், ரம்யாவை பல இடங்களில் தேடினார்கள். அப்போது அந்தப்பகுதியில் உள்ள குளத்தில், ரம்யாவின் கல்லூரி பேக், காலணி ஆகியவை கிடந்தது.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர், பரமசாகரா போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் குளத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ரம்யா, குளத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து தீயணைப்பு படையினர் அவரது உடலை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து பரமசாகரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story