மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 7 Oct 2022 12:30 AM IST (Updated: 7 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

உன்கல்லில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

உப்பள்ளி;


தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா உன்கல் பகுதியில் வசித்து வருபவர் பவன் கம்பார் (வயது 22). இவர் உப்பள்ளியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று கல்லூரி செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். இதில் மோட்டார் சைக்கிள் திடீரென பவனின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோராம் இருந்த தடுப்பு மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட பவன், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திேலயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உப்பள்ளி வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story