டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி பலி
டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
பெங்களூரு:
பெங்களூரு நாகரபாவியை சேர்ந்தவர் சரிதா (வயது 21). இவரது தோழி அனிதா. இவர்கள் 2 பேரும் விஜயநகரில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் சரிதாவும், அனிதாவும் ஸ்கூட்டரில் கெப்பாலம்மா கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். கெங்கேரி அருகே மைசூரு ரோடு, தொட்டபெலே ஜங்ஷன் பகுதியில் சரிதாவும், அனிதாவும் வந்து கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் வந்த ஒரு டிப்பர் லாரி, சரிதாவின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதனால் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சரிதா சில அடி தூரம் இழுத்து செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். அனிதா படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கெங்கேரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story