சிறுபான்மையினர் மாநாடு நடத்த காங்கிரஸ் முடிவு


சிறுபான்மையினர் மாநாடு நடத்த காங்கிரஸ் முடிவு
x
தினத்தந்தி 4 Dec 2022 2:34 AM IST (Updated: 4 Dec 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் சிறுபான்மையினர் மாநாடு நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

பெங்களூரு:-

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இதற்காக பாதயாத்திரை, சித்தராமையாவின் 75-வது பிறந்தநாள், ராகுல்காந்தி பாதயாத்திரையை காங்கிரஸ் கட்சி நடத்தி இருந்தது. மேலும் சித்ரதுர்காவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமூகங்களுக்கான மாநாடு நடைபெற உள்ளது. ஜனவரி 8-ந் தேதி இந்த மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் சிறுபான்மையினர் மாநாடு நடத்தவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கிறது. இந்த மாநாட்டை பிப்ரவரி மாதம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டை எங்கு நடத்தலாம் என்பது குறித்து வருகிற 13-ந் தேதி, பெங்களூருவில் சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் யு.டி.காதர், முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான், காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநாட்டை நடத்துவது குறித்து விரிவாக ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story