ஊழலை பற்றி பேச காங்கிரசுக்கு அருகதை இல்லை


ஊழலை பற்றி பேச காங்கிரசுக்கு அருகதை இல்லை
x

ஊழலை பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு அருகதை இல்லை என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

ஹாசன்:-

விஜயசங்கல்ப யாத்திரை

கா்நாடக சட்டசபைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருப்பதால், பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அரசியல் கட்சியினர் யாத்திரை பெயரில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

மேலும், பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் விஜயசங்கல்ப யாத்திரை தொடங்கி நடந்து வருகிறது.

நேற்று ஹாசனில் நடந்த விஜயசங்கல்ப யாத்திரையில் மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி, ஷோபா ஆகியோர் கலந்துகொண்டனர். ஹாசன் மாவட்டம் பேளூரில் இருந்து ஹலேபீடு வரை நடந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் இந்த யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு நடத்தினர்.

ஊழலுக்கு எதிராக...

இதையடுத்து அரிசிகெேர, சக்லேஷ்புரா பகுதியிலும் விஜயசங்கல்ப யாத்திரை நடந்தது. அரிசிகெரேயில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்ற தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். பிரதமர் மோடியின் தலைமையிலான பா.ஜனதாவின் செயல்பாடுகள் மூலம் பா.ஜனதா மீண்டும் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வரும். இரட்டை என்ஜின் ஆட்சியால் மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்கிறது. கர்நாடகத்துக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா அரசின் சாதனைகளை விளக்க நாங்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளோம். மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களிப்பார்கள்.

வேடிக்கையாக உள்ளது

காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு போட்டி எழுந்துள்ளது. ஊழலை பற்றி பேச காங்கரசுக்கு அருகதை கிடையாது. ஊழல் வழக்கில் சிறை சென்று வந்த டி.கே.சிவக்குமார், ஊழல் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. நாட்டில் ஊழல் நிறைந்த கட்சி காங்கிரஸ் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story