நர்மதா ஆற்றில் பிரியங்கா காந்தி வழிபாடு
மத்திய பிரதேசம் வந்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நர்மதா அற்றில் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார்.
ஜெய்ப்பூர்,
மத்திய பிரதேசத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ஜபல்பூர் வந்துள்ளார். பேரணியுடன் இன்று அவர் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். முன்னதாக, மாநிலத்தின் கலாசார தலைநகரம் என்று அழைக்கப்படும் ஜபல்பூரில் நர்மதா நதியில் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார். மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மாநிலப் பொறுப்பாளர் ஜே.பி. அகர்வால், மாநிலங்களவை உறுப்பினர் விவேக் தங்கா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story