ஊழல் குறித்து பேசுவதற்கு காங்கிரசுக்கு தகுதி இல்லை; மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் விமர்சனம்
ஊழல் குறித்து பேசுவதற்கு காங்கிரசுக்கு தகுதி இல்லை என மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் விமர்சித்துள்ளார்.
மங்களூரு;
உடுப்பியில் நேற்றுமுன்தினம் மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மின் கட்டண உயர்வு தொடர்பாக, முந்தைய அரசுகள் கொண்டு வந்த விதிகள் தொடர்கின்றன. பா.ஜனதா அரசு எந்த புதிய விதியையும் உருவாக்கவில்லை. தற்போதுள்ள அமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
3 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணத்தை மறுசீரமைக்கும் விதி குறித்து யோசிப்போம். விரைவில் முதல்-மந்திரியிடம் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிப்பேன். முதல்-மந்திரி மற்றும் ஊழல் குறித்து பேச காங்கிரசுக்கு தார்மீக உரிமை இல்லை. ஊழல் என்பது காங்கிரசின் வர்த்தக முத்திரை.
அவர்களின் தலைவர்கள் ஊழல் வழக்குகளில் ஜாமீனில் உள்ளனர். அவர்கள் தங்கள் லட்சியங்களின் தெளிவுடன் காங்கிரஸ் யாத்திரையை நடத்துகிறார்கள். முதலில் தங்கள் கட்சிக்காரர்களை ஒன்றிணைக்க காங்கிரஸ் முயற்சித்தால் நல்லது.
இவ்வாறு அவர் பேசினார்.