பா.ஜனதாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி மந்திரி கோபாலய்யா பேச்சு


பா.ஜனதாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி  மந்திரி கோபாலய்யா பேச்சு
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக மந்திரி கோபாலய்யா தெரிவித்துள்ளார்.

ஹாசன்:

மந்திரி கோபாலய்யா

மாநில கலால்துறை மந்திரியும், ஹாசன் மாவட்ட பொறுப்பு மந்திரி கோபால கவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கர்நாடகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் பெறுவதாக தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். யார் கமிஷன் கொடுத்தது, யார் அந்த கமிஷனை பெற்று கொண்டது, யாருடைய வங்கி கணக்கில் அந்த கமிஷன் தொகை செலுத்தப்பட்டது என்பதை நிரூபிக்க முடியுமா. நீங்கள் குற்றம் சாட்டுவதில் உண்மை இருந்தால், ஆதாரத்துடன் வெளியிடுங்கள். ஆளும் பா.ஜனதா கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர். பே-சி.எம் போஸ்டரை அடித்து ஒட்டியது காங்கிரஸ் கட்சியினர் தான். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பா.ஜனதாவுக்கு அவபெயரை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்கிறது. மாநிலத்தில் பசவராஜ் பொம்மை சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

காங்கிரசுக்கு வெற்றி கிடைக்காது

விவசாயிகளின் நலன் கருதி அவர்களின் வங்கி கணக்கிற்கு பணம் போடப்பட்டு வருகிறது. இதுவரை 33 லட்சம் பேருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களும் மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் காங்கிரஸ் மக்களை திசை திருப்பும் வகையில் பாரத் ஜோடோ யாத்திரை நடத்துகின்றனர். இதில் காங்கிரசிற்கு வெற்றி கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story