வாக்கு வாங்கிக்காக சாதி வாரி கணக்கெடுப்பு தேவைப்படுகிறது: அகிலேஷ் யாதவ் விமர்சனம்


வாக்கு வாங்கிக்காக சாதி வாரி கணக்கெடுப்பு  தேவைப்படுகிறது: அகிலேஷ் யாதவ் விமர்சனம்
x

ஏழைகளுக்கான நியாயவிலைக் கடைகளில் எதுவும் கிடைக்காத சூழலே மாநிலத்தில் நிலவுகிறது என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

லக்னோ,

வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பு தேவைப்படுகிறது என சமாஜவாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

மத்தியப் பிரதேச மாநிலம் திகம்கார் பகுதியில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். பிரசாரக் கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசிய கூறியதாவது:-

ஏழைகளுக்கான நியாயவிலைக் கடைகளில் எதுவும் கிடைக்காத சூழலே மாநிலத்தில் நிலவுகிறது. இந்த நிலையை ஏற்படுத்திய பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும். அதற்காக காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க நினைக்கலாம். ஆனால், காங்கிரஸ் தந்திரம் செய்து மக்களை ஏமாற்றும். தற்போது மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் கட்சி கோருவதும் வாக்கு வங்கிக்காக மட்டுமே. இதனை மக்கள் சிந்திக்க வேண்டும்" என்றார்.


Next Story