புலம்பெயர்ந்தவர்களுக்கான ரிமோட் ஓட்டுப்பதிவு எந்திரத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
புலம்பெயர்ந்தவர்களுக்கான ரிமோட் ஓட்டுப்பதிவு எந்திரத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
உள்நாட்டில் புலம்பெயர்ந்தவர்கள், சொந்த ஊருக்கு செல்லாமல், தங்கள் இருப்பிடத்தில் இருந்தே ஓட்டுப்போட வசதியாக 'ரிமோட் ஓட்டுப்பதிவு எந்திரம்' அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-
சமீபத்தில் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. அப்படி இருக்கும்போது, ரிமோட் ஓட்டுப்பதிவு எந்திரம் மூலம் பல இடங்களுக்கும் சந்தேகத்துக்குரிய ஓட்டுப்பதிவை பரவலாக்கினால் என்னாவது என்று கற்பனை செய்து பாருங்கள்.
இது, தேர்தல் முறையில் உள்ள நம்பகத்தன்மையை சீர்குலைத்து விடும். முதலில், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை தவறாக பயன்படுத்துவது தொடர்பான எதிர்க்கட்சிகளின் அச்சத்தை தேர்தல் கமிஷன் போக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story