காங்கிரஸ் கட்சியை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்


காங்கிரஸ் கட்சியை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்
x

சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று சி.டி.ரவி. எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு:-

சி.டி.ரவி எம்.எல்.ஏ.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அதிகரித்ததற்கு பா.ஜனதா கட்சியின் அந்த சமுதாயத்தின் பிரிவினர் சார்பில் அரசுக்கு நன்றிக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சி சிக்கமகளூருவில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்

மாநில அரசு சாதி, மதத்தில் பாரபட்சம் இன்றி நடந்து கொள்கிறது. அந்த வகையில் எஸ்,சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. இந்தியாவில் நீண்ட காலம் காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து நாட்டை முன்னேறவிடாமல் காங்கிரஸ் செய்துவிட்டது.

அதுபோன்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியை வேரோடு பிடுங்கி எரிய வேண்டும். அதனால் வாக்களிப்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். நாட்டை ஒற்றுமை, முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லாமல் காங்கிரஸ் ஆட்சி நடத்தியது. மந்திரி பைரதி பசவராஜ் மீது ரூ.15 லட்சம் லஞ்ச புகார் வைக்கப்பட்டுள்ளது. இது பொய்யானது.

நூற்றுக்கணக்கான ஏக்கருக்கு உரிமையாளராக இருக்கும் மந்திரி பைரதி பசவராஜ் ரூ.15 லட்சம் லஞ்சம் ஏன் கேட்க போகிறார். இதுதொடர்பாக விசாரணை நடத்தலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story