கர்நாடகத்தில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்
கர்நாடகத்தில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என யு.டி.காதர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
மங்களூரு-
காங்கிரஸ் முன்னாள் மந்திரியும், சட்டசபை எதி்ாக்கட்சி துணை தலைவருமான யு.டி.காதர் எம்.எல்.ஏ. மங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளன. இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரிவதில்லை. தேர்தல் விதிமுறைகள் குறித்து தேர்தல் அதிகாரிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். மங்களூரு டவுன் மற்றும் கிராமப்புற மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை மாநில அரசு ரத்து செய்துள்ளது. பா.ஜ.க. எப்போதுமே இடஒதுக்கீட்டிற்கு எதிரானது. வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையும். காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.