பிரதமர் மோடியை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் -ராகுல் காந்தி
, ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். அவர்கள் என்ன செய்தாலும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன்.இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு கட்டிடத்தில் செயல்படும் யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அமலாக்கத்துறை அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்த்தின் வெளியே செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேசியதாவது:-
நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. பரவாயில்லை.. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். அவர்கள் என்ன செய்தாலும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன்.
எங்கள் மீது சில அழுத்தம் கொடுப்பதன் மூலம் எங்களை அமைதிப்படுத்த முடியும் என்று பாஜக அரசு நினைக்கிறது. ஆனால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் இந்த நாட்டிற்காக என்ன செய்கிறார்கள். ஜனநாயகத்துக்கு எதிராக அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அதற்கு எதிராக நிற்போம்.இவ்வாறு அவர் கூறினார்