'காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைத்தால் நாட்டையே விற்றுவிடும்' மத்திய மந்திரி சொல்கிறார்
பா.ஜ.க ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.
போபால்,
பா.ஜ.க ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி இப்போது முதலே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் ரூ.500-க்கு சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ரமேஷ்வர் டெலி "ரூ.500-க்கு சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்கிற காங்கிரசின் வாக்குறுதி கேலிக்குரியது. வாய்ப்பு கிடைத்தால் காங்கிரஸ் நாட்டையே விற்றுவிடும்" என கூறினார்.
Related Tags :
Next Story