பாந்திரா குர்லா வளாகத்தில் ரூ.3,681 கோடியில் பாதாள புல்லட் ரெயில் நிலையம் ஒப்பந்தம் கையெழுத்தானது
பாந்திரா குர்லா வளாகத்தில் ரூ.3,681 கோடியில் பாதாள புல்லட் ரெயில் நிலையம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுடெல்லி,
மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் எனப்படும் அதிவேக ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முட்டுக்கட்டைகளை மராட்டிய மாநில அரசு சமீபத்தில் நீக்கியது.
இந்தநிலையில், புல்லட் ரெயில் திட்டத்தில் மராட்டிய மாநில தரப்பில் முதலாவது ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. மும்பையில், பாந்திரா குர்லா வளாகத்தில் பூமிக்கு அடியில் ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது. புல்லட் ரெயில் நிலையத்தின் ஒரே பாதாள ரெயில் நிலையம் இதுவே ஆகும். ரூ.3 ஆயிரத்து 681 கோடியில் ரெயில் நிலையம் கட்டப்படுகிறது. 54 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்.
பூமிக்கு அடியில் 24 மீட்டர் ஆழத்தில் நடைமேடை அமைக்கப்படுகிறது. 3 தளங்கள் கொண்டதாக ரெயில் நிலையம் அமைகிறது. தலா 415 மீட்டர் நீளத்தில் 6 நடைேமடைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் 16 பெட்டிகளை கொண்ட புல்லட் ரெயில்களை நிறுத்த முடியும்.