மங்களூர் குண்டுவெடிப்பு; முகம்மது ஷாரிக் பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றம்


மங்களூர் குண்டுவெடிப்பு;  முகம்மது ஷாரிக் பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றம்
x

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு குற்றவாளி முகம்மது ஷாரிக் பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மங்களூரு

மங்களூர் நகரில் நாகுரி பகுதியில் கடந்த நவம்பர் மாதம் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மங்களூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த முகமது சாரிக் என்பவரை காலை மங்களூர் போலீசார் பெங்களூர் போலீசார் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டார் .

இது குறித்து மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர்சசிகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முகமது சாரி க்கு மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் பெங்களூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் என்.ஐஏ. அதிகாரிகள் விசாரணையை தொடர்வார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன


Next Story