சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது; முதியவர் பலி


சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது; முதியவர் பலி
x

சிக்பள்ளாப்பூரில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்ததில் முதியவர் ஒருவர் பலியானார்.

சிக்பள்ளாப்பூர்: சிக்பள்ளாப்பூரில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்ததில் முதியவர் ஒருவர் பலியானார்.

முதியவர்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா மேக்கலப்பள்ளி கிராத்தைச் சேர்ந்தவர் லட்சுமணா(வயது 62). நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்திருந்த லட்சமணா காலையில் எழுந்து மின் விளக்கின் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமானது.

இதில் இடிபாடுகளில் சிக்கிய லட்சுமணா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி அறிந்த சேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லட்சுமணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

கியாஸ் சிலிண்டர் வெடித்து...

விசாரணையில், லட்சுமணா நேற்று முன்தினம் இரவு சமையலை முடித்துவிட்டு கியாஸ் சிலிண்டரை அடைக்காமல் இருந்துள்ளார். இதனால் இரவு முழுவதும் கியாஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்தது. இந்த நிலையில் காலையில் எழுந்து அவர் சுவிட்சை போட்டதும் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறி இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story