கர்நாடகத்தில் புதிதாக 348 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 348 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் 16 ஆயிரத்து 474 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 348 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 339 பேருக்கும், ஹாசன், கோலார், மைசூரு, ராய்ச்சூர், துமகூரு, உத்தரகன்னடாவில் தலா ஒருவருக்கும், உடுப்பியில் 3 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
2,478 பேர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 311 பேர் குணம் அடைந்தனர். கொரோனா பாதிப்பு விகிதம் 2.11 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் சுகாதாரத்துறை நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பெங்களூருவில் முகககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து வரும் நாட்களில் மேலும் அதிகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story