கர்நாடகத்தில் புதிதாக 471 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் புதிதாக 471 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 21 ஆயிரத்து 927 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 458 பேருக்கும், பெங்களூரு புறநகர், தட்சிண கன்னடா, தார்வாரில் தலா 3 பேருக்கும், பீதரில் 2 பேருக்கும், கலபுரகி, உடுப்பியில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 2.14 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றுக்கு உயிரிழப்பு நிகழவில்லை.
இந்த தகவலை கர்நாடக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பாதிப்பு 376 ஆக இருந்த நிலையில் அது நேற்று அதிகரித்து 471 ஆக பதிவாகியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
Related Tags :
Next Story