கர்நாடகத்தில் புதிதாக 648 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 648 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடக அரசின் சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கர்நாடகத்தில் நேற்று 23 ஆயிரத்து 452 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 648 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 615 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 12 பேருக்கும், தார்வாரில் 4 பேருக்கும், மைசூருவில் 5 பேருக்கும், சிவமொக்காவில் 3 பேருக்கும், துமகூருவில் 2 பேருக்கும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூருவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
இதன் மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 67 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 532 பேர் குணம் அடைந்தனர். 3,997 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 2.44 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் நேற்று முன்தினம் வைரஸ் தொற்று பாதிப்பு 594 ஆக இருந்த நிலையில் அது நேற்று சற்று அதிகரித்து 648 ஆக பதிவாகியுள்ளது.