சிவமொக்காவில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலி
சிவமொக்காவில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியானார்.
சிவமொக்கா;
நாட்டில் கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக கோர தாண்டவம் ஆடியது. இதனால் நாட்டில் பல லட்சம் போ் தங்களின் உயிர்களை இழந்தனர். இதனால் கொரோனா நோய் தொற்று குறித்து மக்கள் இடையே அச்சம் இருந்து வந்தது. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தொற்று குறைந்து வந்தது.
ஆனாலும் கூட தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது. இதையடுத்து நேற்றுமுன்தினம் சிவமொக்கா மாவட்ட சுகாதாரத்துறை கொரோனா தொற்று குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 126 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், நேற்றுமுன்தினம் 12 பேர் சிகிச்சை பெற்று மீண்டும் வீடுகளுக்கு திருப்பி இருப்பதாகவும், கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்து இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story