பெங்களூருவில், பாதசாரிகள் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குவதால் 100 நடை மேம்பாலங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு


பெங்களூருவில், பாதசாரிகள் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குவதால் 100 நடை மேம்பாலங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு
x

பெங்களூருவில், பாதசாரிகள் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குவதால் 100 நடை மேம்பாலங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக இடங்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெங்களூரு: பெங்களூருவில், பாதசாரிகள் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குவதால் 100 நடை மேம்பாலங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக இடங்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

100 நடை மேம்பாலங்கள்

பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து விட்டது. இதன் காரணமாக நகரில் எந்த சாலைக்கு சென்றாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் நகரின் முக்கியமான ஜங்ஷன்களில் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்வதால், பாதசாரிகளால் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. வாகனங்கள் செல்வதற்கு மத்தியில் சாலையை கடந்து செல்ல முயலும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், பாதசாாிகள் சாலையை கடக்க முடியாமல் இருப்பதாலும், விபத்தில் சிக்கி கொள்வதாலும், இதனை தடுக்கும் பொருட்டு பெங்களூருவில் 100 நடை மேம்பாலங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இதற்காக நகரின் முக்கியமான ஜங்ஷன்களில் நடை மேம்பாலங்கள் அமைக்க மாநகராட்சி தீர்மானித்துள்ளது.

போலீஸ் அதிகாாிகளிடம் தகவல்

தற்போது பெங்களூருவில் 40 பகுதிகளில் நடை மேம்பாலங்கள் உள்ளன. தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடை மேம்பாலங்களை மாநகராட்சி அமைத்திருக்கிறது. அதே நேரத்தில் நகரின் பல்வேறு இடங்களில் 12 நடை மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இதுதவிர பெங்களூருவில் புதிதாக 100 நடை மேம்பாலங்களை அமைக்க முடிவு செய்திருக்கும் மாநகராட்சி, இதுபற்றி போக்குவரத்து போலீஸ் அதிகாாிகளுடனும் ஆலோசனை நடத்தி இருக்கிறது. மேலும் நடை மேம்பாலங்கள் அமைக்க தேவையான இடங்களை தோ்வு செய்யும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story