மாநகராட்சி திட்டப்பணிகளை எடியூரப்பா பார்வையிட்டார்
சிவமொக்கா நகரில் சுதந்திர பூங்காவில் நடக்கும் மாநகராட்சி திட்டப்பணிகளை எடியூரப்பா பார்வையிட்டார்.
சிவமொக்கா;
சிவமொக்கா நகரில் சுதந்திர பூங்கா எனப்படும் பழைய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சுதந்திர பூங்காவில் அனைவரும் நடைபயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்னாள் முதல்-மந்திரியான எடியூரப்பா நடைபயிற்சியில் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து அந்த பூங்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து சிவமொக்கா மாநகராட்சி மூலம் நடைபெறும் சீர்மிகு திட்டப்பணிகளை எடியூரப்பா நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது அதிகாரிகளை அழைத்த அவர் பணிகளை துரிதமாக முடிக்கும்படி அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது அவரது மகனும், எம்.பி.யுமான ராகவேந்திரா உடன் இருந்தார்.
Related Tags :
Next Story