வங்கியில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற பெண் கைது


வங்கியில் கள்ளநோட்டுகளை   மாற்ற முயன்ற பெண் கைது
x

வங்கியில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற பெண் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு: பெங்களூரு பழைய குரப்பனபாளையாவை சேர்ந்தவர் ஷீலா(வயது 36). இவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஜெயநகரில் உள்ள வங்கிக்கு சென்ற ஷீலா 117 எண்ணிக்கையிலான ரூ.100 நோட்டுகளை கொடுத்து மாற்ற முயன்றார். அப்போது அதில் பெரும்பாலான நோட்டுகள் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஷீலாவிடம் வங்கி ஊழியர்கள் விசாரிக்க முயன்றனர். ஆனால் அவர் வங்கியில் இருந்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து வங்கியின் ஊழியர் நாகராஜ் அளித்த புகாரின்பேரில் திலக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷீலாவை பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.


Next Story