இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 7,946 ஆக உயர்வு...!


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 7,946 ஆக உயர்வு...!
x

 Image courtesy: PTI

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 7 ஆயிரத்து ,946 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

நேற்று 7 ஆயிரத்து 231ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 7 ஆயிரத்து 946 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,44,28,393 லிருந்து 4,44,36,339 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 9,828 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,38,35,852 லிருந்து 4,38,45,680 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 37 பேர் பலியாகினர். இதுவரை 5,27,911 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 64,667 லிருந்து 62,748 ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 199.47 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 18,92,969 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 212 கோடியே 52 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story