பால் கூட்டுறவு சங்கங்கள் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது - மத்திய மந்திரி அமித்ஷா
பால் கூட்டுறவு சங்கங்கள் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாக மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கிரேட்டர் நொய்டா,
உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் இன்று நடந்த பால் வளர்ச்சி மாநாட்டில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- பால் கூட்டுறவு சங்கங்கள் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. பல்வேறு நிலைகளில் கிராமப்புற வளர்ச்சிக்கு உதவுகின்றன.
ஆர்கானிக் பால் பொருட்களின் சான்றிதழ், சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதிக்காக நாங்கள் 3 கூட்டுறவு சங்கங்களை உருவாக்குகிறோம். அதற்கான முன்னோடித் திட்டம் அமுல் நிறுவனத்தால் உருவாக்கப்படும்.
அதற்கான ஏற்றுமதி நிறுவனம் இந்த மாத இறுதிக்குள் பதிவு செய்யப்படும். வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 2 லட்சம் புதிய பால் பண்ணைகளை உருவாக்குவோம் இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story