சிக்கமகளூருவில் தலித் அமைப்பினர் போராட்டம்
சதா சிவா ஆய்வு அறிக்கையை நிறைவேற்ற கோரி சிக்கமகளூருவில் தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு டவுன் ஆசாத் பூங்காவில் நேற்று முன்தினம் தலித் அமைப்பினர் தங்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றகோரி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தலித் அமைப்பின் தலைவர் சீனிவாசன் கூறியதாவது:-
மத்திய அரசு சதாசிவா ஆய்வு அறிக்கையை நடைமுறைப்படுத்தவேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதல் இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும். தலித் மக்கள் வசித்து வரும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ரமேஷை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் அவர் வழங்கினார்.
Related Tags :
Next Story