பாதாள சாக்கடை பணியின்போது சமாதிகள் சேதம்
பாதாள சாக்கடை பணியின்போது சமாதிகள் சேதம் செய்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிக்கமகளூரு:
தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகா சந்தேபென்னூர் கிராமத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பொக்லைன் எந்திரத்தின் மூலம் குழி தோண்டப்பட்டது. அப்போது மயானத்தில் நடந்த பணியின்போது, 2 சமாதிகள் சேதம் அடைந்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து, பொக்லைன் எந்திரம் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டெண்டர் எடுத்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள், இடிந்த சமாதிகளை மீண்டும் கட்டி கொடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அந்தப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story