மகள், தங்கையை பலாத்காரம் செய்ததாக எஸ்.ஐ. மீது மனைவி புகார்


மகள், தங்கையை பலாத்காரம் செய்ததாக   எஸ்.ஐ. மீது மனைவி புகார்
x

மகள், தங்கையை பலாத்காரம் செய்ததாக எஸ்.ஐ. மீது மனைவி புகார் அளித்துள்ளார்

பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது பெங்களூரு போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:-

எனக்கும், எனது முதல் கணவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு பிரச்சினை உண்டானது. இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது அந்த போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஒருவருடன் பழக்கம் உண்டானது. அவருக்கும், அவரது மனைவியுடன் பிரச்சினை இருந்தது. இதன்பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் தனது மனைவியை விவாகரத்து செய்தார். எனது கணவரை நானும் விவாகரத்து செய்தேன். பின்னர் சப்-இன்ஸ்பெக்டரை திருமணம் செய்து கொண்டேன். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக என்னை அடிக்கடி சப்-இன்ஸ்பெக்டர் அடித்து, உதைத்து வருகிறார். மேலும் எனது 13 வயது மகளையும், எனது தங்கையையும் மிரட்டி பலாத்காரம் செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அந்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story