மழை காரணமாக கர்நாடகாவில் ராகுல் காந்தியின் 2வது நாள் பாதயாத்திரை தாமதம்


மழை காரணமாக கர்நாடகாவில் ராகுல் காந்தியின் 2வது நாள் பாதயாத்திரை தாமதம்
x
தினத்தந்தி 1 Oct 2022 11:43 AM IST (Updated: 1 Oct 2022 11:44 AM IST)
t-max-icont-min-icon

இன்று நடைபெற இருந்த பாதயாத்திரை கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக தாமதமானது

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., பாரத ஒற்றுமையை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். தொடர்ந்து அவர் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் கேரள மாநிலத்திற்கு சென்றார். கடந்த 11-ந் தேதி தனது பாதயாத்திரையை தொடங்கினார். ர். கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் மீண்டும் தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார். கடந்த 29ஆம் தேதி மாலை அவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக தமிழக மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்திற்கு வந்தார். அங்கு அவரை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான கட்சியினர் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் அங்குள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வேனில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

கூடலூரில் பாதயாத்திரையை முடித்து கொண்ட ராகுல்காந்தி கூடலூரில் இருந்து கர்நாடகாவுக்கு சென்றார்.கர்நாடகாவில் அவர் தனது பாதயாத்திரையை நேற்று தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பாத யாத்திரையாக சென்றனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி தலைமையில் இன்று நடைபெற இருந்த பாதயாத்திரை கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக தாமதமானது.குண்டலுப்பேட்டையில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தில் 2வது நாளாக நடைபயணம் பாதிக்கப்பட்டது.

தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில் ;

பேகூரில் இருந்து காலை 6:30 மணிக்கு தொடங்கவிருந்த யாத்திரையின் 24வது நாள் மழை காரணமாக தாமதமானது.என தெரிவித்துள்ளார்.


Next Story