'பிரேத திருமணம்' இறந்தவர்களுக்கு திருமணம் முடித்து வைக்கும் விநோத வழக்கம்


பிரேத திருமணம் இறந்தவர்களுக்கு திருமணம் முடித்து வைக்கும் விநோத வழக்கம்
x

பிறக்கும் போது இறந்த குழந்தைகளுக்காக இந்த திருமண நிகழ்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம், இந்த ஆத்மாவை சாந்தப்படுத்தும் அந்த மக்கள் நம்புகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் தக்ஷன கன்னடா மாவட்டத்தில் நேற்று முன் தினம் ஷோபாவுக்கும், சந்தப்பா என்பவர்களுக்கு திருமணம் நடந்தது. இதில் என்ன விநோதம் என்றால்..மணமக்கள் இருவரும் இறந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு இந்த திருமணம் நடந்துள்ளது.

கர்நாடகா, கேரளாவின் சில பகுதிகளில் சில சமூக மக்களிடம் இன்றும் இந்த பாரம்பரிய வழக்கம் உள்ளது. இந்த திருமணத்திற்கு பெயர் பிரேத கல்யாணம். பிறக்கும் போது இறந்த குழந்தைகளுக்காக இந்த திருமண நிகழ்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம், இந்த ஆத்மாவை சாந்தப்படுத்தும் அந்த மக்கள் நம்புகின்றனர்.

கேரளாவிலும் கூட இந்த பிரேத கல்யாணம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சிறுவர்களுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கும் பிரேத திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. பிரேத திருமணம் நடந்த அன்று விருந்துகளும் கொண்டாட்டங்களும் நடத்தப்படுவது வழக்கமாக இருக்கிறது.


Next Story