நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : டிசம்பர் 6-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : டிசம்பர் 6-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 25 Nov 2022 7:32 AM GMT (Updated: 25 Nov 2022 7:33 AM GMT)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டிசம்பர் 6-ந் தேதி டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடரை சுமுகமாக நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வரவிருக்கிற குளிர்கால கூட்டத்தொடரில் மொத்தம் 17 பணி நாட்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டிசம்பர் 6-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை அறிய டிசம்பர் 6-ந் தேதி மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Next Story