"2024-க்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்க முடிவு" - மத்திய மந்திரி அமித்ஷா பேச்சு


2024-க்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்க முடிவு - மத்திய மந்திரி அமித்ஷா பேச்சு
x
தினத்தந்தி 27 Oct 2022 4:55 PM IST (Updated: 27 Oct 2022 5:28 PM IST)
t-max-icont-min-icon

2024-க்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அரியானா,

அரியானாவில் நடைபெற்று வரும் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான சிந்தனை முகாமில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

ஜம்மு & காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, பயங்கரவாத நடவடிக்கைகள் 34% குறைந்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் இறப்பு 64% மற்றும் பொதுமக்கள் இறப்பு 90% குறைந்துள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. புதிய குற்றவியல் நடைமுறைச் சட்ட வரைவுகளை விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டு வருவோம்.

இந்த மாநாட்டின் மூலம், சைபர் குற்றங்கள், போதைப் பொருட்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதம், தேசத்துரோகம் மற்றும் இதுபோன்ற பிற குற்றங்களைக் கையாள்வதற்கான கூட்டுத் திட்டத்தைத் திட்டமிட முடியும்.

தேசிய புலனாய்வு அமைப்பை திறம்பட மேலும் அவர்களின் அங்கிகாரத்தை திறம்பட செயல்படுத்த அனைத்து மாநிலங்களிலும் 2024-க்குள் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்க முடிவு செய்துள்ளோம். எல்லை தாண்டிய குற்றங்களை திறம்பட கையாள்வது மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் கூட்டுப் பொறுப்பாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story