இந்தியாவில் திறைமைசாளிகளுக்கு பஞ்சமில்லை - ராஜ்நாத் சிங்
இந்திய பாதுகாப்புத் துறை வரும் காலங்களில் உலக முன்னிலை வகிக்கும் என பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
குஜராத் மாநிலம் காந்தி நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
உலகின் இளம் நாடாக இந்தியா உள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டுமல்லாமல், அறிவாற்றலிலும் இந்தியா இளமையுடன் உள்ளது. அதன் சிந்தனைகளும், இலக்குகளும், பாதைகளும் புதிதாய் உள்ளது. இதனால், அடையும் நோக்கங்களும் புதிய எல்லையாகவே இருக்கும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, குஜராத் முதல் அசாம் வரை திறைமைசாளிகளுக்கு பஞ்சமில்லை. ஆனால், அவர்களை கண்டறிய வேண்டிய தேவை உள்ளது. அவர்களை செம்மைப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிப்பாதையில் இணைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story