டெல்லி விமான நிலையத்தில் ரூ.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
டெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து ரூ.68 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுடெல்லி,
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று பயணி ஒருவரிடமிருந்து ரூ.68 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பஹ்ரைனிலிருந்து வந்த இந்தியாவைச் சேர்ந்த பயணியிடம் இருந்து 1483 கிராம் எடையுள்ள ரூ.68.71 லட்சம் மதிப்புள்ள 14 தங்க கட்டிகளை கைப்பற்றியதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகள் அவரது லக்கேஜூக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story